Skip to main content

Posts

Showing posts from December, 2022

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

                      கூடி வாழ்ந்தால் கோடி நன்மை           கீழ் படியாத கோழிக்குஞ்சுகள்                     ஒர்   ஊரிலுள்ள, ஒரு வீட்ல ஒரு கோழியின் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த அம்மா, அப்பா கோழிகளுக்கு நான்கு அழகிய கோழிக்குஞ்சுகள். பார்க்க மிகவும் அழகாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.                    அந்த   குஞ்சுகளுக்கு, ஆபத்து பல இருப்பதை உணர்ந்த   அந்த அப்பா , அம்மா கோழிகள் தங்கள் நான்கு குஞ்சுகளை மிகவும், கவனமாக வளர்த்து வந்தாங்க. அதனால அந்த கோழிக்குஞ்சுகளுக்கு, ஆபத்துகளை எடுத்து கூறி அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.                   ஆனா நம்ம கோழிக்குஞ்சுகளுக்கு அறிவுரைன்னலே அலர்ஜி. அவைகள்   இரவு முழுவதும் கூண்டுக்குள் இருக்கும், விடிந்ததும் கூண்டைவிட்டு வெளியே வந்து விளையாடும். அவர்களுடைய அப்பா, அம்மா   கூடவே வருவது , அந்த குஞ்சுகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனா   கோழிகளுக்கு, அங்குள்ள நாய், பூனை, மற்றும் பருந்திடம் தங்கள் குஞ்சுகள் மட்டிக்கொல்லுமோ என்ற பயம் இருப்பதால், அந்த கோழிக்குஞ்சுகளை, திட்டி கொண்டே இருப்பாங்க. மேலும், வெயிலிலும், மழையிலும் அவைகள் தன் குஞ்

தற்புகழ்ச்சி தற்கொலைக்கு சமம் ஆப்பிளும் தக்காளியும்

           தற்புகழ்ச்சி தற்கொலைக்கு சமம்              ஆப்பிளும் தக்காளியும்                 ஒரு சந்தையிலுள்ள ஒரு கடைக்கு, காய்களும், கனிகளும் வந்து இறங்கின. அப்படி வந்து இறங்கியதில், ஆப்பிள்களின் கூடையையும், தக்காளிகளின் கூடையையும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது.              ஆப்பிளின்  கூடையில் ஒவ்வொரு ஆப்பிளுக்கும், ஒரு தனி உறை  போட்டிருந்தது. மூச்சி விட மிகவும் சிரமப்பட்ட ஒரு ஆப்பிள், உறையைவிட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தது. அப்போது தன் கூடைக்கு அருகில் ஒரு தக்காளிகளின் கூடையை பார்த்து கோ பம்கொண்டது. “அய்யோ ஆப்பிளான என்னை, இந்த தக்காளிக் கூடையின் அருகே யார் வைத்தது.” என்று கத்தியது. பின்பு, “ ஏய் தக்காளி தள்ளி போ “ என்று கத்த,               தன்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்த தக்காளி, கூடை மேல் வந்து, எட்டிப் பார்த்தது. ஆப்பிள் பக்கத்து கூடை மேல் நிற்பதை கண்டு, நட்புணர்வோடு சிரித்தது. தக்காளியின் சிரிப்பை பார்த்த ஆப்பிளு க்கோ பயங்கர கோபம். “ஏய் என்னைப் பார்த்து ஏன்  சிரிக்குற, நான் என்ன உன் நண்பனா ??” என்று கோவத்தோடு கேட்டது. அதன் கோவத்தை பொருட்படுத்தாமல் தக்காளி, சிரிப்பை நிறுத

நரியின் நம்பிக்கை துரோகம்

                                                                                                   நரியின் நம்பிக்கை துரோகம்                  ஒரு அடர்ந்த காட்டின் குகைல, ஒரு தந்திரமான நரி வாழ்ந்து வந்தது. அதோட தந்திரத்தால, அதுக்கு நண்பர்களாக யாரும் விரும்பமட்டாங்க. தனக்கு உணவாக்கி கொள்ள, அந்த நரி எல்லா வித தந்திரங்களையும்  செய்யும்                  அந்த காட்டிலுள்ள மிருகங்களும், தங்களது குட்டிகளுக்கு நரியின் தந்திரத்தை சொல்லி எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லுவாங்க. இதனால் நரிக்கு தினமும் உணவு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. “என்னடா எல்லோரும் அலெர்ட் ஆருமுகமா யிட்டங்களே ” ன்னு  புலம்ப ஆரமித்தது.                   அப்போது அந்த நரி வேறு ஒரு திட்டத்தை தீட்ட தொடங்கியது. அது நம்ப வைத்து ஏமாற்றுவது, என முடிவு செய்தது. மலை மேல் அதனுடைய குகையிலிருந்து, காட்டை பார்த்த போது, அங்குள்ள குளத்தின் அருகே உள்ள, மரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் இருப்பதை கண்டது. எப்படியாவது அந்த குரங்குகளுடன் பழகி, தனக்கு இரையாக்கி கொள்ள முடிவு செய்து, அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியது.                 தினமும

நிழலின் அருமை வெயிலில்

                         நிழலின் அருமை வெயிலில்            ஒரு குடும்பத்துல அப்பா, அம்மா, மகன் சோமு, மகள் காமு நால்வரும் மிகவும் சந்தோஷமா வாழ்ந்து வந்தாங்க. அன்று சோமுவின் பிறந்த நாள், பள்ளி விட்டு வந்த சோமு, தன் தந்தை தரப் போகும் பரிசை எண்ணி ஆவலாக காத்திருந்தான்.           அலுவலகம் விட்டு வந்த தந்தை, துணி வைத்து மூடிய ஒரு கூடையை, சோமுவிடம் கொடுத்தார். அதை திறந்து பார்த்த சோமு ரொம்ப சந்தோஷப்பட்டான், காரணம் அதில் ஒரு அழகிய நாய்க்குட்டி இருந்தது. நாய்க்குட்டின்னா  சோமுவுக்கு ரொம்ப பிடிக்கும். சந்தோஷதல குதித்த சோமு, அந்த நாய்க்குட்டிக்கு ராமு ன்னு பெயர் வைத்தான்.                    ராமு கொள்ளை அழகு, வீட்டு செல்லம். அவன் செய்யும் குருகம்புகளை, அந்த குடும்பமே ரசித்தது. ராமு தூங்க தனி பெட், உணவு எல்லாமே ஸ்பெஷல் தான். அக்கா காமு, இரண்டு நாளுக்கு ஒரு முறை ஷாம்பூ போட்டு ராமுவை குளிக்க வைப்பாள். அது போல் உணவில் கறி, எலும்பு நிச்சயம் இருக்கும். பள்ளி செல்லும் வரை சோமு, ராமுவை தன் கைவிட்டு இறக்கமாட்டான் . திரும்ப பள்ளி விட்டு வந்ததும் விளையாட்டு.              ஒரு நாள் சோமுவும், காமுவும் பள

2. வாத்துக்குட்டியும் கொக்கும்

                                                      BE CONTENT WITH WHAT YOU HAVE                        இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்                          2. வாத்துக்குட்டியும் கொக்கும்             ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில, ஒரு அழகான பெரிய குளம் இருந்ததாம். அந்த குளத்துல நிறைய மீன்கள்,முதலைகள், வாத்துக்கள், போன்ற உயிரினங்கள் சந்தோஷமா வாழ்ந்து வந்தன. எப்பவாவது கொக்கு, நாரை போன்ற பறவைகளும் வந்து போகும். அந்த குளத்துல ஒரு அழகான வாத்துக்குட்டி தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது. அந்த வாத்துக்குட்டி பயங்கர சுட்டி , அழகான தன் சின்ன உடம்ப அசைத்து அசைத்து, நீரில் நீந்திப்   போகும். அந்த ஆழமான பகுதிக்கு போகாத முதலை வந்து கொன்னுடும்ன்னு அதோட அம்மா சொன்னாலும் கேட்காது.       அதோட அம்மா வாத்து   பேச்ச கேட்காம, அப்பப்ப அந்த பகுதிக்கு போயிட்டு வரும். ஒரு முறை மழை பெய்து நிறைய நீர் குளத்துல வந்தது. கொக்கு, நாரைப் போன்ற பறவைகளும் வந்தன. கொக்குகளைப்   பார்த்த வாத்துகுட்டிக்கு பயங்கர சந்தோஷம், ஏன்னா கொக்கு அங்க இங்க போகாம அப்படியே நின்னுட்டே இருக்கும், அப்பப்ப நீரில் இருந்து, அதன்

முத்துப்பையன்

                                               முத்துப் பையன் `                     அரசூர் என்ற கிராமத்தில் முருகன் என்ற ஒரு   ஏழை விவசாயி அவனது அன்பான மனைவி வள்ளி மற்றும் 5 வயது மகன் முத்துவோடு வாழ்ந்து வந்தான். முருகனுக்கு   சொந்தமாக அவன் தந்தை விட்டுச் சென்ற ஒரு காணி   நிலத்தில் கடினமாக உழைத்து   வந்தான். முருகனும், வள்ளியும் முத்துவோடு   ஒரு சிறு குடிசையில், தங்களின் ஏழ்மையை விரட்ட பாடுபட்டுவந்தனர். வள்ளி வீட்டு வேலைகளை முடித்து, முத்துவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தானும் வயலுக்குச் சென்று முருகனுக்கு உதவி வந்தாள். ஆனால் முத்து அவன் வீடு மற்றும் பெற்றோர்களை வெறுத்து வந்தான். காரணம் அவனுக்கு சோமு என்ற நண்பன் அவன் வீட்டருகே வசித்து வந்தான். அவன் தந்தையோ நிறைய நிலங்களுக்கு சொந்தக்காரர், பெரிய பணக்காரர். சோமு பள்ளி வரும்   போது உடுத்தும் உடைகளும், கொண்டு வரும் உணவுகளையும் பார்த்து முத்துவுக்கு பொறாமையாக இருக்கும். இவற்றைப் பற்றி முத்து தன்   தாய் வள்ளியிடம் கூறுவான். அப்போதெல்லாம் அவள், ஏதோ ஒரு சமாதானமும், பொறமை கொள்ளாதே என்ற அறிவுரையும் கூறுவாள். மேலும் பள்ளி செல்வதை தவிர்த்த