Skip to main content

Posts

Showing posts from August, 2023

நியூட்டனின் மூன்றாம் விதி

          நியூட்டனின் மூன்றாம் விதி           “ வாரம் மூணு தடவையாவது போன் பண்ணிடுவான் தம்பி விவேக், இந்த வாரம் ஒரு தடவை கூட போன் பண்ணலையே, என்னவா இருக்கும்?”, என்று தன் குறுந்தாடியை தடவியபடி சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்துக்கொண்டான் விவேகானந்தன், ஒரு பெரிய எழுத்தாளர் ,நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறான்.                  ஒரு முறை தன் அருகில் இருந்த அலைப்பேசியை எடுத்து மிஸ்ட்  கால்ஸ் ஏதேனும் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்.” ஒரு வேலை மூன்று நாட்களுக்கு முன்பு குளியலறையில் கை தவறி விழுந்ததால், ஏதாவது ஆகியிருக்குமோ”, என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான் நந்தன்.                 பின்பு சுவற்று ஹாங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு, தனது ஸ்பெலன்டரை, தனது நண்பன் கடைத்தெருவில் வைத்திருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு சென்றான்.                 இவனை கண்டதும் குனிந்து ஒரு மொபைலுக்கு ஆபரேஷன் செய்து கொண்டிருந்த அசோக்,”வாடா ரைட்டர்  நந்தா பார்த்து நாளாச்சு என்ன விஷயம்”, என்றான்.”ம்ம்ம்.. எப்படி இருக்கடா, அது ஒரு மூண