Skip to main content

Posts

Showing posts from February, 2023

வெற்றிக் கனி உன் கையில்

                                                  வெற்றிக் கனி உன் கையில்               ஒரு கிராமத்தில், ஒரு விவசாயி தன் மனைவி மற்றும் தன் இரு   மகன்களுடன் வாழ்ந்து வந்தான். அந்த விவசாயி நன்கு உழைத்து விவசாயம் செய்து மேலும் நிறைய நிலங்களை வாங்கி நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.              தன்னுடைய மகன்கள் வளர்ந்தவுடன், அவர்களையும் விவசாயத்திற்கு உதவ பழக்கினான்.தினமும் காலை மூவரும், வயலுக்கு சென்று உழைத்து, மாலை தான் வீடு திரும்புவர். சிறு வயதிலிருந்தே தன் தந்தை சிறிய அளவில் நிலம் வைத்து உழைத்து நிறைய நிலங்களை வாங்கியதால் விவசாய தொழிலை பெரிய மகன் சோமு நன்கு கற்றுக் கொண்டு தன் தந்தைக்கு உதவியாக இருந்தான்.               ஆனால் கடைசி மகன் ராமு, அவர்கள் குடும்பம் நல்ல வசதியில் இருந்த தருவாயில் பிறந்ததால் கடின உழைப்பு என்பது அவனுக்கு கஷ்டம் தான். தன் தந்தை சொல்வதை செய்வான், பெரிய ஈடுப்பாட்டை காட்டிக் கொள்ளமாட்டான்.               நாட்கள் நகர இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம், ஆனால் அதற்கு முன்பு அவர்களுக்கு தன் சொத்தை பிரித்து கொடுக்க வேண்டுமே என்ற யோசனையில் மூழ்கினார்

சிறந்த தலைவன்

                  சிறந்த தலைவன்                           ஒரு அடர்ந்த காட்டில், ஒரு சிங்க ராஜா, தன் மனைவி மற்றும் ஒரு குட்டியோடு வாழ்ந்து வந்தது . நல்ல கம்பீர தோற்றம், அடர்ந்த பிடரி மயிர், மூர்க்கமான கண்கள், கூரிய நகங்கள் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் .                           அந்த சிங்கத்தை பார்த்தால், அக்காட்டில் வாழும் உயிரினங்களுக்கு பயம் தான். யாரும் சிங்க ராணி மற்றும் குட்டியுடன் பேசமாட்டார்கள். காரணம் சிங்க ராஜா மீதுள்ள பயம் தான் .இந்த சிங்க ராஜா தானும் தன் குடும்பமும்   உண்ண, தினமும் ஒரு விலங்கை வேட்டையாடி கொண்டு வரும். எதைப் பற்றியும் கவலைப்படாது. ஆதலால் அந்த காட்டில் வாழும் உயிரினங்களுக்கு தங்கள் ராஜாவை பிடிக்காது. வேறு வழியின்றி வாய் மூடி வாழ்ந்து வந்தது.                         இப்படியிருக்க, ஒரு இடத்த்தில் முயல்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் கூட்டத்தில், ஒரு சிறிய முயல் குட்டி மிகவும் சுறுசுறுப்பாகவும், தைரியமாகவும் இருந்தது. அந்த முயல் குட்டிக்கு காட்டு ராஜாவின் அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் , தன் பெற்றோரிடம் சொல்லி மிகுந்த கோபப்படும்.       

வெற்றி நிச்சயம்

                  வெற்றி நிச்சயம்                       ஒரு ஊரில் மாரிமுத்து என்ற செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தான். அவன் ஒரு கடை வீதியில் ஒரு மர நிழலில் அமர்ந்து காலணிகளை தைத்து தன் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியோடு வாழ்ந்து வந்தான்.                       ஒரு வருடம் முன்பு, நடந்த சாலை விபத்தில் தன் ஒரு காலை இழந்த மாரிமுத்து, சில மாதம் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தான். அவனுக்கு பதிலாக அவனுடைய மனைவி தன் பழைய தையல் மெஷின் மூலம் வரும் வருமானம் வைத்து குடும்பம் நடத்தி வந்தாள்.                    தன் இரு குழந்தைகள் கல்விக்கு அவளுடைய வருமானம் மட்டும் போதாது என்று உணர்ந்த மாரிமுத்து, ஒரு பழைய சக்கர வண்டி ஒன்றை வாங்கி, அதை வைத்து தினமும் தன் கடைக்கு செல்ல தீர்மானித்தான். அதன்படி தினமும் காலையில் மதிய உணவையும் எடுத்துக் கொண்டு தன் சக்கர வண்டியில் மெல்ல தன் கடைக்கு சென்று காலணிகளை   பாலிஷ் செய்வது, கிழிந்த காலணிகளை தைப்பது, பின்பு தான் வாங்கி வைத்திருக்கும் மூலப் பொருளை வைத்து தரமான ஷூ மற்றும் காலணிகளை தயார் செய்து வந்தான்.                 தான் செய்யும் ஒவ்வொரு

தக்க சமயத்தில் உதவி

              தக்க சமயத்தில் உதவி                      ஒரு நகரத்தில், பல தரப்பட்ட மக்கள் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தனர். பொது மக்கள் அதிகமாக நடமாடும், பகுதியில் ஒரு பெரிய உணவகத்தை வேலவன் என்ற நபர் நடத்தி வந்தார்.                        அவர் உணவகம் ஆரமித்தப் பிறகு நிறைய உணவகங்கள் , அந்த தெருக்களில் முளைக்க ஆரமித்தது. ஆனால் முதலில் உணவகம் ஆரமித்திருந்தாலும், வேலவனின் உணவகத்துக்கு மக்கள் வரவு குறைவாகவே இருந்தது. இதற்கான காரணம் தெரியாமல் வேலவன் தினமும் கவலையோடு இருந்தார். அவர் உணவகத்தில் வேலை செய்யும், வேலையாட்களும் சலிப்புடனும், சோகத்துடனும் காணப்பட்டார்கள்.                      செய்வதறியாமல் தவித்த வேலவன், இனி முழு நேரமும் தன் உணவகத்திலேயே இருந்து என்ன காரணம் என்று கண்டுப்பிடிக்க நினைத்து, மறுநாள்   அதிகாலையிலேயே உணவகத்துக்கு வந்தார். அங்கேயே தன்னுடைய மூன்று வேலை உணவையும் உண்ணுவது என்று தீர்மானித்து, மேலாளரை அழைத்து தனக்கு இனிமேல் இங்கேயே உணவை தயார் செய்யுமாறு கூறினார்.                     இதைக் கேட்ட மேலாளர் உடனே அடுக்களைக்குள் சென்று அங்குள்ள சமையற்காரரிடம், இனிமேல் தங்கள் ம

தும்பிக்கையே நம்பிக்கை

                தும்பிக்கையே நம்பிக்கை            தன் கையே தனக்கு உதவி                  ஒரு   காட்டில் ஒரு யானை குடும்பம் வாழ்ந்து வந்தது. தாய், தந்தை மற்றும் ஒரு குட்டியுடன், தினமும் நீர் பருக காலையில் காட்டுக்கும், கிராமப்புறத்திற்கும் இடையே உள்ள நீர் நிலையில் நீர் அருந்தி மகிழும். அப்போது கிராமப்புற வாசிகள், அந்த யானைகளை வேடிக்கை பார்க்க வருவார்கள். வரும் போது நிறைய பழங்கள் மற்றும் உணவுகளை கொண்டு வருவர்.                  இதனால் மகிழ்ந்த அந்த யானை குடும்பம் , மக்கள் தரும் உணவுகளை உண்டு, நீர் அருந்தி விட்டு காட்டுக்குள் வந்து ஓய்வெடுத்து , பின்பு விளையாடி பொழுதை கழித்து வந்தது. இப்படியே நாட்கள் செல்ல தந்தை மற்றும் தாய் யானைகள், தங்களின் பலம் குறைந்து, சோம்பேறியாக மாறி வருவதை   உணர்ந்தது. காரணம், உணவுக்காக தேடி அலையாமல், ஒரே இடத்தில் தேவைக்கு அதிகமாகவே கிடைப்பதால், இது தங்களையும் தங்கள் குட்டியின் எதிர்காலத்தையும், உடல் நலத்தையும் பாதிக்கும் என்றுணர்ந்து இருவரும் வேறு எங்காவது நீர் நிலை உள்ளதா என்று தேடத் தொடங்கியனர்.                  இதை கண்ட குட்டிக்கு மிகவும் கோபம் வந்தது. த

தந்திரக்கார சிலந்தி

                தந்திரக்கார சிலந்தி                     ஒரு சிலந்தி, அதன் கூட்டை தன் எச்சிலால் மிக உறுதியாக கட்டிக் கொண்டிருந்தது. வெகு நாட்களாக தன் கூட்டை மிகவும் சிரத்தையோடு காட்டி வருவதால்       சற்று இளைப்பாறியது.                      தன்னிடம் ஏற்கனவே இரையான, பூச்சிகளின் கூடுகள் அதன் கூட்டில் சிக்கியிருந்தது. இதைக் கண்டால் மற்ற பூச்சிகள் வரத் தயங்கும் என்றெண்ணி, அனைத்தையும் தட்டி விட்டு சுத்தம் செய்தது. அந்த சிலந்திக்கு பசி எடுக்கவே, சுற்றியும் தன் பார்வையை செலுத்தியது. அதன் கூட்டருகே ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி பறந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த சிலந்திக்கு, எப்படியும் அந்த வண்ணத்துப் பூச்சியை தன் இரையாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆவல் வர, அதனிடம் பேசி தனக்கு இரையாக்கி கொள்ள முடிவு செய்தது.                    இதனையறியாத அந்த வண்ணத்துப் பூச்சி, அந்த கூட்டினருகே பறந்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்த வண்ணத்துப்பூச்சியை தன் அழகிய பேச்சால், கூட்டிற்கு வர வழைத்தால்   எளிதாக உணவாக்கி கொள்ளலாம் என்றெண்ணி, மெல்ல தன் குரலை கனைத்துக் கொண்டு, “ ஏய், அழகியே, உன்னைத்தான், இங்கே வா,” என்று க

மாய வலை

                    மாய வலை                                 போதும் என்ற மனமே பொன் செய்யும்                       ஒரு ஊரின் கடற்கரை ஓரமாக, பல மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அங்கு ஒரு மீனவன் தன் மனைவியுடன் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வந்தான். தினமும் காலை தன் வலையை எடுத்துக் கொண்டு , தன் சிறிய படகில் கடற்கரைக்குச்   சற்று தொலைவிலேயே மீன் பிடிப்பான். சிறிய மீன்கள் தான் கிடைக்கும், மாலை வரை கிடைத்த மீன்களை எடுத்து வந்து விற்று காசாக்கி தன் மனைவியிடம் கொடுப்பான்.                      இருவருக்கும் போதுமான வருமானம் கிடைத்ததால், சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வீட்டு அருகில் வசிக்கும் மற்றொரு மீனவனோ, தன் பெரிய விசைப் படகை எடுத்துக் கொண்டு,   தொலைவில் சென்று பெரிய பெரிய மீன்களை பிடித்து வந்தான். ஒவ்வொரு மீனும் நல்ல விலைக்குப் போனதால், அந்த குடும்பதிற்கு அதிக வருமானம் கிடைத்தது. அதனால், அந்த வீட்டில் உள்ள பெண்மணி நிறைய நகைகளை அணிந்து ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.                       இதை கண்ட நம் மீனவனின் மனைவிக்கும்   ஆசை வர. தன் கணவனிடம் வேறு படகு வாங்கி, அதிக தொலை