Skip to main content

Posts

Showing posts from April, 2023

ஒரு கைதியின் டைரி

               ஒரு கைதியின் டைரி               என் பெயர் அந்தோணி, வயது 55 , நான் தற்போது திருநெல்வேலியிலுள்ள சிறையில் தஞ்சம். எனது 35 தாவது வயதில் இங்கு வந்தேன், பத்து வருடம் 100 வருடமாக கழிந்தது. ஆனால் 10   வருடம் முன்பு நடந்த அந்த சம்பவம் ,இன்று நடந்தது போல் உள்ளது. நான் திருநெல்வேலி அடுத்துள்ள வயலூரில் என் மனைவி மேரி, மகள் எலிசபெத் மற்றும் மகன் ஜான் உடன் சந்தோஷமாக   வாழ்ந்து வந்தேன்.               நான் என் ஊர் அருகே இருக்கும் டவுன் மார்க்கெட்டில்   காய்கறி கடை வைத்திருந்தேன். நான் வழக்கமாக் அதிகாலை 3:௦௦ மணிக்கு எனது டிவிஎஸ் வண்டியை எடுத்துக்கொண்டு மார்க்கெட் வருவேன், அங்கு வரும் காய்கறி லோட் வண்டியில் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு, அனைத்து வியாபாரிகளிடம் விலையை பற்றி ஆலோசனை செய்து, என் கடைக்கு வந்து காய்கறிகளை கடை பையன் துணையோடு அடுக்கி , நியாயமான முறையில் வியாபாரம் செய்து வந்தேன்,                 சரியாக எட்டரை மணிக்கு எனது மகனும் மகளும் காலை டிபன் மற்றும் மதிய உணவை   கொடுத்து விட்டு   மார்க்கெட்டுக்கு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு செல்வார்கள். அதே போல் மாலை திரும்பும்போது, க

நிழலின் அருமை வெயிலில்......

                                                  நிழலின் அருமை வெயிலில் ......                      பழனியப்பன் ஒரு வெங்காய வியாபாரி. பழனியப்பனின் தந்தையும் மிதிவண்டியில் ஒரு கூடையில் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு பழனியப்பன் ஒரே செல்ல மகன், படிப்பு ஏறவில்லை, ஆதலால் தன்னுடைய வியாபார நுணுக்கத்தை பழனியப்பனுக்கு கற்றுக் கொடுத்தார். பழனியப்பனும் படு சுறுசுறுப்பாக கற்றுக்கொண்டான்.                      அவன் ஒரு ஊர், தந்தை ஒரு ஊர் என்று பல இடங்களுக்கு சென்று மிதிவண்டியில் வெங்காயம் விற்று வந்தனர். இரவில் வீடு திரும்புகையில் பெரும்பாலும் அவர்களது கூடை காலியாகவே இருக்கும்.                      வியாபாரம் செழிக்கவே, மிதிவண்டி டிவிஸ் 50 ஆக மாறியது, வயது மூப்பு காரணமாக பழனியப்பனின் தந்தை வீட்டிலேயே இருக்கையில், பழனியப்பன் மட்டும் வியாபாரத்திற்கு சென்று வந்தான். இந்நிலையில் பழனியப்பனின் தந்தை தனது நண்பனின் மகள் வள்ளியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்.                      தனது மருமகன் டிவிஸ் 50 யில் சென்று வருவதை பார்த்த மாமனார், ஒரு டாட்டா ACE வண்டியை வாங்கி கொடுத்தார். வியாபா