Skip to main content

Posts

Showing posts from January, 2023

என்னால் முடியும்

                                                 என்னால் முடியும் வெற்றிக்கான நிரந்தர வழி , தோல்வி அடைந்தபிறகும் இன்னுமொரு தடவை முயற்சி செய்வது                     ஒரு காட்டில், தாய், தந்தை பச்சைக்கிளி தங்கள் மூன்று குட்டி பச்சைக்கிளிகளோ யோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. குஞ்சு பொறித்த சிறிது நாட்களே ஆனதால், தந்தை கிளி , தாய் கிளியை கூட்டிலேயே தன் குழந்தைகளை கவனித்து கொள்ள விட்டு விட்டு தான் மட்டும் இறை தேடி சென்று வந்தது. தாய் கிளி தன் குழந்தைகளுக்கு எப்படி நடக்க, உண்ண, பறக்க வேண்டுமென்று சொல்லி கொடுத்து வந்தது.                     நாட்கள் கடந்தன, மூன்று குட்டி பச்சைக்கிளிகளும் நன்கு வளர, அவைகளும் பறக்கும் திறமையை வளர்த்து கொள்ள , தாய் மற்றும் தந்தை கிளிகள் தினமும் பயிற்சி கொடுத்தது. முதல் இரண்டு பச்சைகிளிகளும் ஆர்வமாக கற்று, பறக்க முயற்சி செய்தன. ஆனால் கடைசி குட்டி பச்சைக்கிளிக்கு , பறக்க பயம், விழுந்து விடுவோம் என்ற பயம். அதனால் சாக்கு போக்கு சொல்லி கூட்டிலிருந்து, தன் சகோதர, சகோதரிகள் பறக்கும் பயிற்சியை வேடிக்கை பார்த்து வந்தது.                      தாய் மற்றும் தந்தை கிளிக

பேராசை பெரு நஷ்டம்

               பேராசை பெரு நஷ்டம்                       ஒரு ஊர்ல , ஒரு கணவன் மனைவி, தங்களது சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். தினமும் கணவன் , அருகிலுள்ள காட்டுக்கு போய், விறகுகளை சேகரித்து கட்டி ,மாலை சந்தைக்கு சென்று விற்று விட்டு, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை   வாங்கி வந்து ,தன் மனைவியிடம் கொடுப்பான். அவள் அதை வைத்து சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தாள்.                       மறுநாள், வழக்கம் போல் விறகு வெட்ட கணவன் செல்ல கிளம்பும் போது, மனைவி தன் கணவனிடம், தங்கள் வீட்டுக்கு ஒரு குட்டி வாரிசு வரப் போவதாக கூற, கேட்ட கணவன் மிகவும் மகிழ்ந்தான். மேலும் மனைவி தன் கணவனிடம் இது வரை அவன் கொண்டு வந்த வருமானம் கட்டுப்படி ஆகாது, நிறைய பணம் வேண்டும் என்று கூறினாள்.                       இதை கேட்ட கணவன் பலத்த யோசனையோடு ,தன் மனைவி கொடுத்த மதிய உணவை, எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான். மிகுந்த யோசனையோடு ஒரு மரத்தடியில் அமர்ந்தான். தான் இது வரை கீழே விழுந்த காய்ந்த குச்சிகளையே எடுத்து விற்று வந்தோம். இனிமேல் காய்ந்த மரங்களை வெட்டலாம் என்று எண்ணி, தான் கொண்டு வந்த கோடரியை எடுத்து சிறி

பாலுவும் போலுவும்

                                    பாலுவும் போலுவும்          “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்”                            ஒரு அடர்ந்த காட்ல, பாலு, போலு என்ற கரடி சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். பாலு அண்ணன் பொறுமைசாலி, ஆனால் கோபக்காரன். போலு   தம்பி பாசக்காரன் ஆனால் விளையாட்டுத்தனம் அதிகம்.                             அவர்கள் பிறந்ததும் அவர்கள் பெற்றோர்களை, அருகிலுள்ள உயிரியல் பூங்காவுக்கு, வேட்டைக்காரர்கள் பிடித்து சென்று விட்டனர். அதிலிருந்து பாலுவும், போலுவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். காலையில் எழுந்ததும் பாலு, காட்டுக்குள் சென்று தங்கள் இருவருக்கும் தேவையான தேன் மற்றும் பழங்களை சேகரிக்க சென்று விடும். ஆனால் போலுவோ நன்கு தூங்கி வெகு நேரம் கழித்து எழுந்து, அருகிலுள்ள பூக்கள் நிறைந்திருக்கும் சோலைக்கு சென்று அங்குள்ள பட்டம்பூச்சிகளுடன் விளையாடிவிட்டு, அங்கேயே இளைப்பறி விட்டு, பின்பு அருகிலுள்ள குளத்தில் சென்று நீர் அருந்திவிட்டு தன் அண்ணன் பாலுவுக்காக காத்திருக்கும்                            பாலுவும் தேன் மற்றும் பழங்கள் எடுத்துக் கொண்டு, குளத்தருகே வரும். இருவரும் நன்கு ப

கண்ணியமான கழுதை

                              கண்ணியமான கழுதை உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கை களைவதாம் நட்பு ஒரு   ஊரின் வெளியே பரந்த நிலபரப்பு இருந்தது. அது பச்சை ஆடை உடுத்திய பதுமை போல் எப்போதும் பசுமையாக விரிந்து கிடக்கும். கடும் கோடை காலத்திலும் அப்புல்   வெளி பசுமையாகவே காணப்படும். அதனால் அருகிலுள்ள கிராமத்தினர் தங்கள் கால்நடைகளை, காலையில் அங்கு வந்து மேய விட்டு பின்பு மாலையில் கூட்டிச் செல்வது வழக்கம் ஆகி இருந்தது. அவ்வாறு இருக்கையில், அந்த ஊரின் பெரிய பணக்காரர் ஒரு அழகிய கருப்பு நிற குதிரையை வளர்த்து வந்தார். அந்த குதிரை மிகவும் அழகாகவும், ஆரோக்கியமாகவும், மினுமினுப்பான உடல் , நீண்ட அடர்த்தியான வால் கொண்டு அசைந்து அசைந்து புல்   வெளிக்கு வரும், அதை பார்க்கும் அனைத்து கால்நடைகளும் அதன் அழகை கண்டு வியந்து போவர். அந்த பணக்காரர் குதிரை மேல் ஏறி பல சாகசங்களை செய்வார். பின்பு அந்த குதிரையை அங்கேயே விட்டு விட்டு , மாலையில் வந்து கூட்டி செல்வார். இப்படி இருக்கையில் அந்த ஊரில் உள்ள ஒரு சலவைத் தொழிலாளி . தான் வைத்திருந்த பொதி சுமக்கும் கழுதையை காலையில் அந்த இடத்தில் விட்டு விட்டு, துணிகளை

Sam & Berry

                                Sam & Berry                                முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து                       அகநக நட்பது நட்பு.                      குழந்தைகளே ! Tom & Jerry    கதை, நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது, Tom க்கு Sam   என்ற அழகிய மகனும் ( நாய்க்குட்டி), Jerry   க்கு Berry என்ற   அழகிய மகனும் (பூனைக்குட்டி) இருந்தார்கள். பெற்றோர்களான டாம் மற்றும் ஜெர்ரி வழக்கம் போல் சண்டைப் போட்டுக் கொண்டு பேசாமல் இருந்தனர்.                     மேலும் பகைமை உணர்வை, தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி வளர்த்தனர்.இதனால் சாம் மற்றும் பெர்ரியும் பேசாமல் தனித்தனியே தெருவில் விளையாடி வந்தனர்.                    ஒருமுறை இவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது பெர்ரி ஒரு உயரமான குப்பைத் தொட்டியிலிருந்து கீழே குதித்தது. அது பூனை ஆதலால் அதற்கு அடிப்படவில்லை. குதித்தவுடன் அது நடந்து அந்த இடத்தை விட்டு சென்றது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாம் நாய்க்குட்டி, தானும் பெர்ரி போல் குதிக்கலாம் என்றெண்ணி, அதுவும் அந்த உயரமான குப்பைத் தொட்டியிலிருந்து   கீழே குதித்தது. அவ்வளவு உயரத்

TREASURE HUNT புதையலைத் தேடி

                                                                     TREASURE HUNT         புதையலைத் தேடி                கூடி வாழ்ந்தால் கோடி நன்மை                 ஒரு ஊர்ல ராஜா என்ற சிறுவன் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டிற்கு செல்லப்  பிள்ளை, அவன் யாருடன் நட்பு கொள்ளாமல், தனியே விளையாடுவான், பள்ளியிலும் அவனுக்கு நண்பர்கள் கிடையாது. இதனால் கவலை கொண்ட அவன் தாய், நண்பர்கள் தேவைப் பற்றி பல அறிவுரைகள் கூறுவார். ஆனால் ராஜா அதெல்லாம் கேட்டுக் கொள்ளவே மாட்டான்.                  அவனுக்கு அரையாண்டு விடுமுறை வந்தது, வீட்டுக்குள்ளேயே விளையாட ஆரமித்தான், வெளியே செல்வதை தவிர்த்தான். அப்போது ஒரு நாள் ராஜாவின் தாய் , ஒரு பையில் உணவுகள், நீர் நிரப்பிய குடுவைகள், ஆடைகள்,போன்ற பொருட்களை வைத்து ராஜாவிடம் கொடுத்து, ஒரு காடு, மலை , பாலைவனம், பூஞ்சோலை , மற்றும் ஒரு கடலை கடந்தால், அங்குள்ள குகையில் புதையல்  ஒன்று இருப்பதாகவும். அதை நீ எடுத்து கொண்டு வா , உன் வாழ்க்கைக்கு அது பெரிய உதவியாக இருக்கும் என்றார்.                   அதை கேட்ட ராஜாவுக்கு மிகுந்த சந்தோஷம் , தன் தாய் கொடுத்த பை