Skip to main content

Posts

Showing posts from March, 2023

கனவு மலர்ந்தது

                     கனவு மலர்ந்தது                        ஒரு பெரிய நகரத்தின் மத்தியில் , அந்த வாராஹி அம்மன் கோவில் இருந்தது. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கூட்டம் அலைமோதும். அப்போது வாராஹி அம்மனுக்கு விதவிதமான மலர்களை கொண்டு அலங்கரிப்பர். அந்த மலர் அலங்காரத்தை காணவே கூட்டம் வரும்.                      அந்த மலர் அலங்காரத்துக்கு சொந்தக்காரர்கள் மருதமுத்தும் அவரது மனைவி மஞ்சுளாவும் தான். மருதமுத்துவும் அவனைது தந்தையும் இந்த மலர் அலங்கார வியாபாரத்தை , கோவில் வாயிலில் ஒரு சிறு கடை வைத்து துவங்கினர். அவர்களது கடின உழைப்பு இன்று , பல மாநிலங்களிருந்து அம்மனுக்கு விதவிதமான மலர்களை வாங்கி, அதை குளிர் சாதன அறையில் வைத்து பராமரித்து , அம்மனுக்கும்,மற்ற விற்பனைக்கும் கொடுத்து நன்கு சம்பாதித்து வந்தான். தான் மட்டுமல்லாமல் தன் மனை வி, மகளுக்கும் இந்த வேலையை விபரமாகவும், விளக்கமாகவும் சொல்லிக் கொடுத்து வந்தான்.                    கொரோனா ஆழிப் பேரலை போல் வந்து மருதமுத்துவின் உயிரை எடுக்க, அவனது மனைவி வேறு வழியின்றி கடையை நிர்வகிக்க துவங்கினாள். மருதமுத்து இருந்தவரை அவர்களது மகள் பூங்கோதை பள்ளிக்

நன்றிக் கடன்

                    நன் றிக் கடன்                  தொலைவில் கோழி கூவும் சத்தம் கேட்க, “அய்யோ! விடிந்து விட்டது, இன்னும் தூங்குகிறோமே”, என்று தன்னை தானே கடிந்துக் கொண்டு தன் போர்வையை விலக்கி தன் உள்ளங்கையை பார்த்து ஏதோ முணுமுணுத்து கொண்டே, தன் அருகே பார்வையை செலுத்தினால் செல்வி. காலியாக இருந்தது ,   ஓ ! காலையில் வாக்கிங் சென்று விட்டாரா? அவர் வர்றதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணணுமே”, என்று படுக்கையை விட்டு விருட்டென்று எழுந்தாள்.                 குளித்துவிட்டு, துண்டை தலையில் சுற்றியவாறு, “இப்ப எழுப்பினா தான் இவன காலேஜ் க்கு கிளப்ப முடியும்”, என்று தன் மகன் ராகுல் இருக்கும் அறையை தட்டியவாறு ,”ராகுல் காலேஜ் க்கு நேரமாகுது பாரு , கிளம்பு” என்று கூறியவாறு பூஜை அறைக்கு சென்றாள் செல்வி.                தினப் பூஜையை முடித்துவிட்டு, அடுக்களைக்கு சென்றாள். “என்ன இன்னும் இருட்டு விலகவில்லை, விடிந்தும் ஏன் இருட்டாகவே உள்ளது”, என்று தனக்குள் சொல்லியாவாரே சமையலை துவங்கினாள்   செல்வி.                மகன் ராகுலுக்கு பிடித்த FRIED RICE, POTATO FRY, செய்து, காலை டிபன் இட்லி, தக்காளி சட்னி செய்து அனை

அமைதி

                                          அமைதி                                கிஷோர்   தன் மனை வி ஆர்த்தி மற்றும் மகன் தீபக்கோடு, ஒரு சிறிய அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். தீபக் பிறப்பதற்கு முன்பு ஆர்த்தி ஒரு பெரிய நிருவனத்தில் பணி   புரிந்து வந்தாள். பின்பு தீபக் பிறக்கும் தருவாயில் அவளது வேலையை விட்டு தற்காலிகமாக நின்றவள், பின்பு அவனை கவனித்துக் கொள்ளும் எண்ணத்தில் நிரந்தரமாக வேலையை விட்டு நின்றாள்.                              இருவரும் சம்பாதிக்கும் போது தாராளமாக செலவழித்தவர்கள், தற்போது கிஷோரின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த சற்று சிரமப்பட்டனர். தீபக்கும் பள்ளிக்கு செல்ல துவங்கினான்.                               வேலையின் மீதே கவனம் இருந்ததால், வீட்டு வேலை ஆர்த்திக்கு சற்று சிரமம் கொடுத்தது. ஏதோ தனக்கு தெரிந்ததை செய்து வந்தாள் . ஆனால் அது கிஷோருக்கு அதிருப்தியை கொடுத்தது. இது காரணமாக இரண்டு பேருக்கும் அவ்வப்போது சண்டை வந்தது.                               மகன் தீபக்கிற்கு தெரியாமல் இருந்த அவர்களது சண்டை, நாளடைவில் அவன் கண் முன்னேயும் அரங்கேறியது. இதனால் அவன் ச

Dada , I Love You!

                                     Dada , I Love You!                                                  சந்தோஷ் , ஒரு பிஸியான மெடிக்கல் representative . அவன் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், தன் மனைவி நந்தினி மற்றும் குழந்தை ஐஸ்வர்யாவோடு வாழ்ந்து வந்தான்.                     சந்தோஷ் நல்ல திறமைசாலி, தன் பேச்சு திறமையால், தனக்கான டார்கெட்டை எளிதில் achieve செய்து, Employee of the Week மற்றும்   Employee of The Month   என்று தான் வேலை செய்யும் பெரிய மருந்து கம்பெனியில் நல்ல பெயர் எடுத்திருந்தான்.                    அப் பெயரை தக்க வைக்க கடினமாக உழைத்து வந்தான். அவன் திறமையை பாராட்டி அவனுக்கு ஒரு அழகிய நீல வண்ண SUZUKI BALENO காரைப் பரிசாக வழங்கினர். சந்தோஷ் மற்றும் மனைவி குழந்தைக்கு மகிழ்ச்சி   தாங்கவில்லை. கார் வாங்கிய கையோடு, தன் குடும்பத்தோடு சந்தோஷ் ஒரு ட்ரிப் சென்று வந்தான். அதற்கு பிறகு வேலை பளு காரணமாக வேறு எங்கும் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.                    ஐஷுவை   பள்ளி கூட்டி செல்வது, அழைத்து வருவது எல்லாம் நந்தினி தான். ஆனால் ஐஷுவுக்கோ, தன்னை தன் அப்பா காரில் அழைத்

HELP

                                         HELP                  ஒரு நகரில் உள்ள காவல் நிலையத்தில், மாணிக்கம் என்பவர் constable ஆக பணியாற்றி வந்தார். அவர் காவலர் குடியிருப்பில் தன் மனைவி மற்றும் மகள் மாலினி உடன் வாழ்ந்து வந்தார்.                 சிறிய குடும்பம் என்றாலும் சந்தோஷத்துக்கு குறைவில்லை. ஆனால் ஒரே ஒரு குறை மூவருக்கும், என்னவென்றால், வெகு ஆண்டுகளாக constable ஆகவே இருப்பது. இவருடன் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் ஊதிய உயர்வு பெற்று உயர் பதவிக்கு சென்றுவிட்டனர், இது அவருக்கு பெரிய மனவருத்தத்தை தந்தது.                  அவர் குறை கலைய அவருடைய மனைவி மற்றும் குழந்தை மாலினியும் நிறைய ஆறுதலும், ஊக்கமும் அளித்து வந்தனர். அவர் மனைவி கூறுகையில், உங்களுக்கான நேரம் வரும், அதுவரை பொறுமையாக காத்திருப்பது அவசியம் , என்று கூறுவாள்.                  காவல் நிலையம் சென்றாலும், அனைவரும் இவரை ஏளனமாகவும், நமட்டு சிரிப்புடன் தான் வரவேற்பர். ஆனால் மாணிக்கம் தன் மனதை திடப்படுத்திக்கொண்டு , தனக்கு இடப்படும் பணியை சிரத்தையாக செய்து வந்தார்.                  மாணிக்கத்தின் மகள் மாலினியும் இன்ஸ்பெக்டர