Skip to main content

Posts

நன்றிக்கடன்

                               நன்றிக்கடன்                    “இரண்டு நாளா இந்த மழை நிக்காம , என் பொழப்புக்கு வேட்டு வைச்சிட்டு, அரசாங்கம் வேற ரெட் அலெர்ட் அறிவிச்சிட்டு, யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க வருமானத்துக்கு என்ன பண்ண”, பிரசவத்துக்கு வந்திருக்கிற மவளுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும், எந்நேரமும் பிரசவம் ஆகலாம், கையில பணம் வேணும், என்ன செய்ய போறேன் ஆண்டவா”, என்று தனக்கு தானே பேசியப்படி, தன் வலையை சீர் செய்துக்கொண்டிருந்தான் கோவிந்தன்.                     “ஏம்பா, நீங்க வாடிக்கையா இறால், மீன், நண்டு கொடுப்பீங்களே ஜெயராமன் சார் அவர ஒரு மாசமா காணோமா, ஏதோ பிசினஸ் ல நஷ்டம் ஏற்பட்டதால ஊற விட்டு போயிட்டராமே, அப்படியா,” என்று டீய ஆத்தியப்படி பிரசவத்துக்கு வந்த மகள் பொன்னி அருகில் வந்தாள்.                    “ஆமாம்மா, அந்த கொடுமைய ஏன் கேக்குற, அந்த புண்ணியவதி முகத்த பார்க்க முடியல, உன்ன போல அவுங்க மவ ப்ரியாவும் பிரசவத்துக்கு வந்திருக்கு, என்னத்த சொல்ல. அந்த ஜெயராமன் சார் அப்படி   ஓடி ஒழியிறவரு இல்ல,ம்ம்ம்,” என்றான் கோவிந்தன்.                    “

திரும்பி வந்த அப்பா

                                திரும்பி வந்த அப்பா             அந்த தாமரைக்குளம் பகுதியே நேற்று பெய்த மழையில் குளமாய் காணப்பட்டது. நல்ல மழை, தகிக்கும் சித்திரை மாதத்தில் அவ்வப்போது வரும் மழையே அலாதி சுகம் தான்.                          காலை வழக்கம் போல் டீக்கடை முருகன் கடையில் நல்ல கூ ட்டம்.”என்ன முருகா, இப்படி வெயில் அடிக்குது, சரி சரி ஒரு டீயப்   போடு”, என்று டீ   குடிக்க ஒரு காரணம் தேடியவர்கள். இன்று,”என்ன முருகா, நேத்து ராத்திரி நல்ல மழை போல, சரி சரி ஒரு டீயப்    போடு,” என்று ஆண்டவன் முருகனிடம் கேட்பது போல் கேட்டு விட்டு டீ யை குடிப்பது அந்த ஊர் சம்பிரதாயம் போல் இருந்தது.                         ஆனால் டீக்கடை முருகனோ, எந்த ஒரு பதிலும் கூறாமல், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு , டீ போடத் துவங்குவான்.                           நேற்று வரை, “ஏம்பா இந்த கத்திரி வெயிலுல என் கத்திரி செடியெல்லாம் கருகிடும்போல,” என்று கூறிய கோவிந்தன். இன்று “ஏம்பா   நேத்து பெய்ஞ்ச மழைல , என் கத்திரி செடியெல்லாம் சாய்ஞ்சிட்டு பா,” என்று கூறிக் கொண்டிருந்தார். இதை கேட்ட மற்றொருவர்,”அட ஆமாம்ப்பா, ஒன்னு ப

பாண்டி ஆண்டியான கதை

                                பாண்டி ஆண்டியான கதை                 பாண்டி வயது 32, 6' அடி தடித்த கருத்த உருவம், சுருள் முடி, முறுக்கி விட்ட மீசை, அவனுக்கு தெரிந்த ஒரே தொழில் திருட்டு.                  அவன் தன் பெற்றோர்   யார் என்று தெரியாதவன். சொந்தம், நண்பர்கள் இல்லாதவன். யாரைப் பற்றியும் எதற்கும் கவலைபடாமல், திருடுவதும் நன்கு வயிறு புடைக்க மாமிசம் உண்டு விட்டு, குடித்து திரிந்து வந்தான்.                  திருடுவதில் கை தேர்ந்ததால், காவலர்களிடம் மாட்டாமல் தப்பித்து வந்தான். அது கார்த்திகை மாதம், திருவண்ணாமலை கலை கட்டியிருந்தது, பக்தர்களும், சாதுக்களும் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.                    இன்று தன் கைவரிசையை காட்டவேண்டியதுதான் என்றெண்ணிய பாண்டி, அவன் நின்றிருக்கும் மரம் அருகே ஒரு பெரிய வண்டி வந்து நிற்பதை பார்த்ததும் கண்காணிக்கத் தொடங்கினான். வண்டியிலிருந்து ஆண்களும் பெண்களும் காவி உடை அணிந்து விபூதி மற்றும் ருத்திராட்சம் அணித்திருந்தனர்.                  அவர்கள் அமைதியாக வண்டியிலிருந்து பொருட்களை இறக்க துவங்கினர். அனைவர் முகத்திலும் அமைதி மற்றும் புன்முற