Skip to main content

Posts

எல்லாம் நன்மைக்கே

              எல்லாம் நன்மைக்கே                                 “ என்ன ஜென்னி கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு போகலையா ஹாஸ்டல்ல   தான் இருக்க போறியா,ஏதோ இந்த வருஷம் தொடர்ந்து     ஒரு வாரம் லீவு கிடைச்சிருக்கு மிஸ் பண்ணாதடி போயிட்டு வா, ஒரு பெரிய வங்கியில் உதவி மேலாளராக இருக்க நீ பிறந்து வளர்ந்த வீட்ல போயி தங்க என்ன தயக்கம் பக்கத்துல உதவிக்கு ஆள் இருக்காங்க, போடி போய் தைரியமாக இருந்துட்டு வா, இப்படி ஹாஸ்டல் ரூமிலேயே அடைந்து   இருக்காதே ஜென்னி , இப்ப வரப்போற நியூ இயர்ல நான் ஒரு தைரியமான தன்னம்பிக்கையான ஜென்னியை பார்க்கணும் புரியுதா பை ,எனக்கு பஸ்சுக்கு லேட்டாயிடுச்சு கிளம்புறேன் அட்வான்ஸ் ஹாப்பி கிறிஸ்மஸ் அண்ட் ஹாப்பி நியூ இயர் வரேன் அடுத்த வருஷம் பார்ப்போம்,” என்று கூறி செல்லமாக கன்னத்தை தட்டி சென்றாள் அர்ச்சனா. இவள் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறாள். “அர்ச்சனா ரொம்ப துணிச்சலான பொண்ணு எப்படி இவ்வளவு தைரியமா இருக்கா, அவளுக்கு என்ன அவ அப்பா அம்மா கூட இருக்காங்க, அதனால தைரியமா இருக்கா,” என்று ஜென்னி நினைத்துக்கொண்டாள். சரி இந்த தடவை லீவுக்கு ஊருக்கு போயிட்டு வருவோம் ஆனால் அம்
Recent posts

நியூட்டனின் மூன்றாம் விதி

          நியூட்டனின் மூன்றாம் விதி           “ வாரம் மூணு தடவையாவது போன் பண்ணிடுவான் தம்பி விவேக், இந்த வாரம் ஒரு தடவை கூட போன் பண்ணலையே, என்னவா இருக்கும்?”, என்று தன் குறுந்தாடியை தடவியபடி சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்துக்கொண்டான் விவேகானந்தன், ஒரு பெரிய எழுத்தாளர் ,நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறான்.                  ஒரு முறை தன் அருகில் இருந்த அலைப்பேசியை எடுத்து மிஸ்ட்  கால்ஸ் ஏதேனும் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்.” ஒரு வேலை மூன்று நாட்களுக்கு முன்பு குளியலறையில் கை தவறி விழுந்ததால், ஏதாவது ஆகியிருக்குமோ”, என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான் நந்தன்.                 பின்பு சுவற்று ஹாங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு, தனது ஸ்பெலன்டரை, தனது நண்பன் கடைத்தெருவில் வைத்திருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு சென்றான்.                 இவனை கண்டதும் குனிந்து ஒரு மொபைலுக்கு ஆபரேஷன் செய்து கொண்டிருந்த அசோக்,”வாடா ரைட்டர்  நந்தா பார்த்து நாளாச்சு என்ன விஷயம்”, என்றான்.”ம்ம்ம்.. எப்படி இருக்கடா, அது ஒரு மூண